மேயர் பிரியா மீது சமூக வலைதளத்தில் பரவும் குற்றச்சாட்டுகள்..!! வைரலாகும் செய்தி..!!

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடர்பாக சமூக வலைதளமான X-ல் பரவி வரும் பதிவு ஒன்று அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

அந்தப் பதிவில், சென்னை மாநகராட்சியின் 100 பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் வாங்க ₹60 லட்சம் மதிப்பில் திட்டமிடப்பட்டதாகவும், அதே எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு பிரிண்டர்கள் ₹22 லட்சத்தில் வாங்கப்பட்டதாகவும் கூறி செலவு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், மேயர் பிரியா அறிவித்ததாகக் கூறப்படும் 90 புதிய திட்டங்கள் மறு ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுவரை சென்னை மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட அரசு துறைகள் சார்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அல்லது உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

Read Previous

கடத்தப்பட்ட கணவரை மீட்க கேங்ஸ்டர் தாயையே பணயமாகப் பிடித்த மனைவி.. மீண்டும் வைரலாகும் சம்பவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular