மாநிலங்களவை எம்.பி.க்களுக்காக 2 ஆண்டுகளில் ரூ.261 கோடிக்கு மேல் செலவு: RTI தகவல்..!!

 

 

மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம், படிகள் மற்றும் பிற வசதிகளுக்காக கடந்த இரண்டு நிதியாண்டுகளில் (2024–25 மற்றும் 2025–26) மத்திய அரசு ரூ.261 கோடிக்கும் அதிகமாக செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் தாக்கல் செய்த RTI மனுவுக்கு மாநிலங்களவை செயலகம் அளித்த பதிலில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

 

அதன்படி, 2024–25 நிதியாண்டில் ரூ.98 கோடியாக இருந்த செலவு, 2025–26 நிதியாண்டில் ரூ.163 கோடியாக உயர்ந்துள்ளது.

 

எம்.பி.க்களின் சம்பளம், படிகள் மற்றும் இதர வசதிகளுக்கான செலவினம் அதிகரித்திருப்பது RTI பதில் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Read Previous

திரிபுரா டிஜிபி அனுராக் தன்கர் மரணம்: உயர்மட்ட விசாரணை தீவிரம்..!!

Read Next

அதிமுகவில் பரபரப்பு: சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா கடிதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular