திரிபுரா மாநில காவல்துறைத் தலைவர் (DGP) அனுராக் தன்கர் (IPS), அகர்தலாவில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்துள்ளார்.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கியால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தன்னைத்தானே சுட்டுக்கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகளின் அடிப்படையிலேயே மரணத்திற்கான துல்லியமான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




