‘ராமாயணா’ டிரெய்லர் வெளியீடு… பிரம்மாண்ட காட்சிகளால் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த படக்குழு..!!

 

 

பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான ராமாயணாவின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று (ஜூலை 30) அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் வெளியிடப்பட்டது.

 

வெளியான சில நிமிடங்களிலேயே டிரெய்லர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரமாண்டமான காட்சி அமைப்புகள், உலகத் தரத்திலான கிராபிக்ஸ், சக்திவாய்ந்த பின்னணி இசை மற்றும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் நடிகர்களின் தோற்றம் ஆகியவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

 

ரன்பீர் கபூரின் ஸ்ரீராமர் தோற்றம், சாய் பல்லவியின் சீதை கதாபாத்திரம் மற்றும் யாஷின் ராவணன் தோற்றம் ஆகியவை டிரெய்லரின் முக்கிய அம்சங்களாக பேசப்பட்டு வருகின்றன. திரைப்படத்தின் தொழில்நுட்ப தரமும், காட்சி வடிவமைப்பும் இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

இரண்டு பாகங்களாக உருவாகி வரும் ராமாயணா திரைப்படத்தின் முதல் பாகம் 2026-ஆம் ஆண்டு தீபாவளியிலும், இரண்டாம் பாகம் 2027-ஆம் ஆண்டு தீபாவளியிலும் உலகம் முழுவதும் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

டாஸ்மாக் ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை.. கூடுதல் விலைக்கு மது விற்றால் அபராதம் மற்றும் பணிநீக்கம்..!!

Read Next

செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை.. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular