டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவர் இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
தவெக எம்.எல்.ஏ பேரம் தொடர்பான வழக்கில் விதிக்கப்பட்ட நிபந்தனையின்படி, வாரந்தோறும் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ஆனால், இன்று அவர் காவல் நிலையத்திற்கு வரவில்லை என்றும், வர இயலாததற்கான எந்தவித தகவலையும் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக கருதப்படுமா என்பது குறித்து சட்ட ரீதியான ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும், செந்தில் பாலாஜி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையும் காவல்துறையும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ நடவடிக்கை குறித்து அடுத்த சில நாட்களில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




