தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் வாயிலாக 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தலுக்கு 7 மாதங்களே உள்ளன. வாக்காளர்களை கவர ஆளும் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொங்கலுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 5,000 வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி சமயத்தில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.




