மக்களின் அன்றாட வாழ்வில் அத்தியாவசிய தேவையாக இருப்பது உணவு. எனவே தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் அரிசி பருப்பு சர்க்கரை முதலியன ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு ரேஷன் கார்டு மிகவும் முக்கிய ஆவணமாகும்.புதிய ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு இணையதளத்தில் TNPDS என்ற பக்கத்திற்குள் சென்றவுடன் அந்த பக்கத்தில் மின்னனு அட்டை சேவைகள் என்ற காலம் இருக்கும். அதில், புதிய அட்டை விண்ணப்பிக்க, மின்னணு அட்டை விண்ணப்பித்தின் நிலை , மறுபரிசீலனை விண்ணப்பம் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதில் இருக்கும் அந்த காலத்தில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிப்பதற்கு என்பதனை கிளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து புதிய மின்னணு அட்டை விண்ணப்பிப்பதற்கான பக்கத்திற்குள் செல்லும். அங்கு குடும்பத் தலைவரின் பெயர்,தந்தையின் பெயர், முகவரி, எந்த மாவட்டம், மண்டலம், கிராமம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண் மற்றும் ஈமெயில் முகவரியை பூர்த்தி செய்ய வேண்டும். இதனையடுத்து குடியிருப்புச் சான்று ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும், ஆதார் கார்டு அல்லது வேறு ஏதேனும் சான்று இருந்தால் இணைக்க வேண்டும். அடுத்ததாக ஏற்கனவே எரிவாயு சிலிண்டர் உள்ளதா என்பது தொடர்பான விவரங்களை பதிவு செய்யப்பட்டு உறுதி செய்தால் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதனையடுத்து உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் பரிசீலனை செய்த பிறகு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.




