தமிழகத்தில் நாளுக்கு கல்லூரி படித்து வெளியில் வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே சமயம் வேலையில்லா திண்டாட்டமும் தலைவிரித்தாடி வருகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில் ஆங்காங்கே வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் வருகிற செப்டம்பர் 21ஆம் தேதி (21-09-2024) சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், 10,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




