இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் , 2027 உலகக் கோப்பைத் திட்டம் தொடர்பாக மற்றும் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங் கூறுகையில், “2027 உலகக் கோப்பைத் திட்டத்தில் ரோஹித் மற்றும் விராட் இடம்பெறுகிறார்களா இல்லையா என்பதை இந்திய அணி நிர்வாகம் இப்போதே அவர்களிடம் தெளிவாகப் பேச வேண்டும். திட்டத்தில் இல்லையெனில் அதை நேருக்கு நேர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்” என்றார்.
மேலும், “வெளியில் அது தவறாகத் தோன்றினாலும், உண்மையை நேரடியாகச் சொல்வதை அவர்கள் மதிப்பார்கள். ரோஹித், விராட் இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது. ஆனால், மூத்த வீரர்கள் தொடர்பான முடிவுகளில் நிர்வாகம் தெளிவுடனும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும்” என யுவராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.




