காவிரி ஆற்றில் தமிழகத்துக்குரிய பங்கு நீரை வழங்க மறுப்பதாகக் கூறி, கர்நாடக அரசை அதிமுக பொதுச்செயலாளர் விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசு அரசியல் சாசன விதிகளையும், உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் மீறும் வகையில் செயல்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கான உரிய நீரைப் பெற்றுத் தர மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நீர் பகிர்வு விவகாரம் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்டகாலமாக கருத்து வேறுபாடுகள் நீடித்து வரும் நிலையில், இந்த விவகாரம் மீண்டும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.




