விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
வெளியான முதல் 7 நாட்களில் இந்தியாவில் ரூ.174.63 கோடி வசூலித்துள்ள இப்படம், வெளிநாடுகளில் ரூ.81 கோடி வசூலையும் சேர்த்து, உலகளவில் மொத்தம் ரூ.255.63 கோடி வசூலைக் குவித்துள்ளது. ஆக்ஷன், உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் விஜய்யின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வசூல் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் மேலும் புதிய சாதனைகளை ‘ஜனநாயகன்’ திரைப்படம் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலக வட்டாரங்களில் நிலவி வருகிறது.




