உக்ரைனுக்கு நிதி உதவி குற்றச்சாட்டு.. ரஷிய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டு சிறை..!!

 

 

உக்ரைனுக்கு ரகசியமாக நிதி உதவி செய்ததாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில், ரஷிய பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு மாஸ்கோ நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

 

போர்ப்ஸ் ரஷியா இதழில் பணியாற்றி வந்த தர்யா ஷிபச்சேவா, தண்டனையை குறைக்கும் நோக்கில் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்ற ரகசிய விசாரணையின் முடிவில் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

 

இந்த தீர்ப்பு ரஷியாவில் கருத்துச் சுதந்திரம், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு மற்றும் தேசத்துரோக வழக்குகள் குறித்த சர்வதேச கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளது.

Read Previous

100 நாள் வேலை செய்த பெண்ணுக்கு ₹2.79 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்.. வங்கிக் கணக்கும் முடக்கம்..!!

Read Next

வசூலில் புதிய மைல்கல்.. ‘ஜனநாயகன்’ பாக்ஸ் ஆபிஸில் அதிரடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular