வாழைக்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..!! அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு..!!

நமது உடலுக்கு நன்மை விளைவிக்கும் காய்களை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அதில் வாழைக்காய் மிகவும் சரியான ஒன்றாகும். இந்த வாழைக்காயில் பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதில் நமது உடலுக்கு நன்மை தரும் சத்துக்கள் என்னென்ன இருக்கிறது என்று இந்த பதிவில் காண்போம்.

பொட்டாசியம்: வாழைக்காயில் பொட்டாசியம் அளவு மிக அதிகமாக இருக்கிறது. இது நம் இதய செயல்பாட்டை அதிகப்படுத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

புரோட்டின்: ஒரு நாளைக்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய புரோட்டீன் அளவு இந்த வாழைக்காயில் கிடைக்கிறது.

நார் சத்து: இந்த வாழைக்காயில் நார் சத்தும் மிக அதிகமாக இருக்கிறது. இதனால் நமது குடல் செயல்பாட்டை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து சரி செய்கிறது.

விட்டமின்கள்: வாழைக்காயில் பல விட்டமின்கள் இருக்கின்றன இதில் முக்கியமானவை, விட்டமின் C, விட்டமின் B6, மற்றும் விட்டமின் A. இந்த விட்டமின்கள் இருப்பதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகையை தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் இந்த வாழைக்காயில் மினரல்ஸ், கால்சியம், மாங்கனீஸ், மெக்னீசியம் போன்ற முக்கியமான சத்துக்கள் நிறைய கொட்டி கிடைக்கின்றன.

வாழைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

இந்த வாழைக்காய் நமக்கு மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி போன்ற பிரச்சனைகளை ஏற்பட விடாமல் பாதுகாத்து வருகிறது. மேலும் இது ரத்த அழுத்தத்தை ஏற்படவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இந்த வாழைக்காய் நமது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் தோல் பாதிப்புகளிலிரந்தும் நமக்கு தீர்வு அளிக்கிறது.

Read Previous

நம்முடைய வாழ்வில் ஏன் சிலர் மட்டும் முன்னேறுகிறார்கள்?.. உண்மையான காரணம் இதுதான்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

கொண்டைக்கடலையை அதிகம் விரும்பி சாப்பிடும் நபரா நீங்கள்..!! இந்த பதிவை கட்டாயம் பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular