கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற விருது விழாவில் த்ரிஷா பேசிய வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது. நிகழ்ச்சியில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் படம் திரையில் காட்டப்பட்டபோது, “அவரது புதிய பயணத்திற்கு வாழ்த்துகள்; கனவுகள் அனைத்தும் நிறைவேறட்டும், அவர் அதற்குத் தகுதியானவர்” எனத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாக பரவி வருகிறது.




