விராலிமலையில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் பேசிய நாஞ்சில் சம்பத், திமுக மீது கடும் விமர்சனம் முன்வைத்தார். அதில், திமுக இன்று நவீன ரக ஒட்டுண்ணிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், கட்சிக்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும், வெளியிலிருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், தமிழக மக்களுக்கு கடைசி நம்பிக்கையாக தவெக தலைவர் விஜய் மட்டுமே உள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.



