வெண்டைக்காயை வைத்து அசத்தலான தின்பண்டம் செய்து பார்த்திருக்கிறீர்களா..!! சுவையான செய்முறை இதோ..!!

வெண்டைக்காயை சாப்பிடுவதால் நமது உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் வந்து சேருகிறது. ஆகையால் இதை வைத்து ஸ்டஃப் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

தேவையான பொருட்கள் : 

வெண்டைக்காய் – 250 கிராம்

தேங்காய் – சிறிதளவு

கடலை மாவு – 4 தேக்கரண்டி

கொத்தமல்லி – சிறிதளவு

பூண்டு – இரண்டு பல்

பச்சை மிளகாய் – இரண்டு

இஞ்சி – சிறிதளவு

வெங்காயம் – ஒன்று

எண்ணெய் – ஆறு தேக்கரண்டி

தனியா பொடி – ஒரு தேக்கரண்டி

சீரகப்பொடி – ஒரு தேக்கரண்டி

மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி

மிளகாய்ப்பொடி – ஒரு தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

பச்சை மிளகாய் கொத்தமல்லி வெங்காயம், இஞ்சி ஆகியவற்றை குட்டியாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பூண்டு தேங்காய் இஞ்சி மிளகாய் ஆகியவற்றை கடலை மாவுடன் அரைத்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

மஞ்சள் பொடி, சீரகப்பொடி உப்பு, மிளகாய் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். வெங்காயத்தை அதில் போட்டு இந்த கலவையை வெண்டைக்காய்க்குள் பிளந்து அடைக்க வேண்டும்.

விதைகளை வெளியே எடுத்துவிட்டு இதனை உள்ளே சேர்க்கவும். ஒரு கடாய் எடுத்து அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு இந்த வெண்டைக்காய் ஸ்டஃபை போட்டு பொன்னிறமாகும் வரை பொறித்து எடுத்தால் சுவையான வெண்டைக்காய் ஸ்டஃப் தயார்.

Read Previous

வேப்பம்பூவை சாப்பிட்டால் இதெல்லாம் நடக்குமா..!! அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

வாழைப்பூவை வைத்து துவையல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பாருங்கள்..!! மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும் இந்த துவையல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular