நம் அனைவருக்கும் சாப்பிடும் போது ஏதேனும் காய்கறிகள் இருந்தால் நன்றாக சாப்பிடுவோம். மேலும் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த காய்களில் ஒன்றாக நிச்சயமாக வெண்டைக்காய் இருக்கும். இந்த வெண்டைக்காயை வைத்து அசத்தலான பொரியல் எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் – 1 கப்
மிளகாய் வத்தல் – 2
வறுத்த வேர்கடலை – அரை கப்
சீரகம் – அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய், கடுகு, உப்பு – தேவையான அளவு
பூண்டு – 4 பல்
வெங்காயம் – அரை
கருவேப்பிலை
மிளகாய் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி – தலா 1/2 ஸ்பூன்
செய்முறை:
வெண்டைக்காயை நீல நீளமாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். வத்தல் வேர்க்கடலை சீரகம் ஆகியவற்றை நன்றாக ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு பச்சை மிளகாய் கடுகு, பூண்டு, வெங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கிய பின்பு மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, மல்லி பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு நாம் முன்பு அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்த்து கிளறி வட்டு இறக்கி விடவும். அவ்வளவுதான் சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார்.




