பானகம் செய்வது எப்படி.
பானகம் என்பது கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். அதுவும் குறிப்பாக நமது முன்னோர் காலகட்டத்தில் பானகம் என்பது மிகவும் பரிட்ச்சயமான ஒன்று. இந்த காலகட்டத்தில் இருப்பவருக்கு பானகம் என்றால் என்ன என்று கூட தெரியாது. குறிப்பாக கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களிலும் கோடை காலத்திலும் இந்த பானகத்தை ரெடி செய்து குடிப்பார்கள். இது உடலுக்கும் மிகவும் நல்லது. இத்தகைய பானகத்தை எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
தேவையானவை:
எலுமிச்சம் பழம்_ 1
வெல்லம் / பனை வெல்லம் _ ஒரு துண்டு
தண்ணீர்_ இரண்டு டம்ளர் அளவிற்கு
சுக்குத்தூள் ஒரு துளிக்கும் குறைவாக
ஏலக்காய் தூள் துளிக்கும் குறைவாக
உப்பு _ துளிக்கும் குறைவாக
செய்முறை:
எலுமிச்சம் பழத்தை விதைகள்,திப்பி இல்லாதவாறு பிழிந்து வைத்துக்கொள்ளவும்.வெல்லத்தைப் பொடித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைத்து கல், மண் இல்லாமல் வடிகட்டிக்கொள்ளவும்.இந்த வெல்லத் தண்ணீரில் சுக்குத்தூள்,ஏலத்தூள்,உப்பு,எலுமிச்சை சாறு விட்டு காஃபி ஆத்துவதுபோல் ஆத்தி இரண்டு டம்ளர்களில் ஊற்றி சுவைத்து குடிக்க வேண்டியதுதான்.



