காலங்காலமாக முன்னோர்கள் எல்லாம் காலை வேளையில் பழைய சோற்றை சாப்பிடுவது வழக்கம், ஆனால் இன்றைய காலகட்டத்தில் பழைய சோற்றை கண்டாலே பத்தடி தூரம் நகர்ந்து செல்லும் மனிதர்களை நம்மால் காண முடியும், இன்றைய தலைமுறைகள் எல்லாம் ஃபாஸ்ட் குட்டை நோக்கி ஓடுகிறது ஆனால் பழைய சோறு மகத்துவத்தை அவர்கள் அறிவதே இல்லை..
உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன காலையில் இதை சாப்பிடுவதால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும், உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தை போக்குவதற்கு சிறந்த மருந்தாக பழைய சோறு உதவுகிறது, மேலும் இந்த உணவு நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால் மலச்சிக்கலையும் நீக்கும் உடல் சோர்வை விரட்டும், மேலும் ரத்த அழுத்தம் சீராகும் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதை கொஞ்சம் கொஞ்சமாக தனிய செய்யும், மேலும் பழைய சோறு சாப்பிடுவது சிறந்த சுவையும் உடலுக்கு தேவையான நார் சத்துக்களையும் தருகிறது அதே போல் பழைய சோறுக்கு தொட்டுக் கொள்ள பச்சை மிளகாய் வெங்காயம், ஊறுகாய் மற்றும் காய்கறி பொரியல் சாப்பிடும் பொழுது சுவை இன்னும் கூடும்..!!



