#வெளிநாட்டு_வாழ்க்கை…
வெளியே இருந்து பார்ப்போர்க்கு ஒரு பிரமாண்டமாக தெரியும் வெளிநாட்டு வாழ்க்கை… இங்கு வந்து பார்த்தால் மட்டும் தான் தெரியும் வெளிநாட்டு வாழ்க்கையின் கஷ்டம்..
கூட்டத்தோடு இருந்தாலும் தனிமையில் இருப்பது போல தான் இருக்கும்.
ஊரில் இருக்கும் போது வெளிநாட்டுக்கு போனால் போதும் என்று தோன்றும்
இரண்டு வருடம் கஷ்டப்பட்டால் நம் கஷ்டமெல்லாம் தீர்ந்து போகும் என்று நினைத்து வருவார்கள்…
இங்கு வந்த பிறகு தான் தெரியும் எப்படா ஊருக்கு போவோம் என்று ஒரு பத்துக்கு பத்து அறையில் ஆறு பேர் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு ஆறுதல் அந்த ஆறு பேர் மட்டும் தான்.
வெளிநாட்டு வாழ்க்கை என்பது ஒரு நரக வாழ்க்கை துக்கம் துயரம் இன்பம் துன்பம் எல்லாம் அந்த பத்துக் பத்து அறைக்குள்ள தான்…
இரண்டு வருடத்தில் நம் கஷ்டம் தீர்ந்துவிடும் ஊருக்கு போயிடலாம் என்று நினைத்து வருவார்கள் 30 வருஷமானாலும் போக முடியாது குடும்ப சூழ்நிலை காரணமாக ..
ஓய்ந்து இருக்கையில் சாய்ந்து கொள்ள தாயும் இல்லை!
இன்பமாய் இருக்கையில் அன்பு கொள்ள தாரம் இல்லை!
கோபமாய் இருக்கையில் கொஞ்சி பேச குழந்தை இல்லை!
ஏங்கி இருக்கையில் தாங்கி கொள்ள நட்பும் இல்லை! .
நல்ல உணவும் இல்லை சொல்ல உறவும் இல்லை!
அக்கா தங்கை திருமணத்தை வீடியோவில் பார்த்து அழுதவர்களும் இருக்கிறார்கள்.
ஊர் திருவிழாவை வீடியோவில் பார்த்து அழுதவர்களும் இருக்கிறார்கள்.
அதைவிட தன் உறவினர் ஒருவர் மரணம் அடைந்ததை வீடியோவில் பார்த்து அழுதவர்களும் இருக்கிறார்கள்
நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்…
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்…?
உங்க குடும்பத்தில் இருந்து உங்க “மகனோ’ “அண்ணனோ’ “தம்பியோ “கணவனோ யாரோ ஒருவர் வெளிநாட்டில் இருந்தால்
அவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் “சந்தோஷத்தையும் “நிம்மதியையும் மட்டும் கொடுங்கள்.
ஏனென்றால் பணம் மட்டும்தான் கிடைக்கும் சந்தோசம் நிம்மதி எதுவுமே கிடைக்காது…. அப்படியே கிடைத்தாலும் அதில் நிரந்தரமாக இருக்காது..
இதுதான் என்னுடைய பத்துக்கு பத்து ரூம் நாங்கள் மூன்று பேர் இருக்கிறோம்..




