நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியையும் எதிர்பார்ப்பையும் தந்துள்ளது, இளைய தளபதி விஜய் என்றாலே அவருக்கென்று தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் ரசிகர் பட்டாளம் உண்டு அப்படி இருக்கும் பட்சத்தில் கோட் திரைப்படத்தின் 13 நாட்கள் வசூல் ரூபாய் 413 கோடியை எட்டியுள்ளது…
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் அமோக வெற்றியை மற்றும் வரவேற்பை மக்களிடையே பெற்றுள்ளது, இப்படம் திரைக்கு வந்து 13 நாட்களில் ரூபாய் 413 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது, தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான படம் தமிழைத் தவிர மற்ற மொழிகளில் பெரிய அளவில் வசூல் ஆகாததால் ஆயிரம் கோடி வசூல் இலக்கை அடைவது கடினமே, தமிழில் பெரும் வெற்றியை பெற்று தளபதி விஜயின் அடுத்த படத்திற்கு விஜய் ரெடியாகி வருவதை ரசிகர்கள் பெரிதும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்…!!




