BREAKING: நாகர்கோவில் சிறை மரணம்: சபரிவர்மன் வழக்கு CBCID-க்கு மாற்றம்..!!

 

 

நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளியான சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையை CBCID-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இந்த வழக்கில் முதற்கட்ட நடவடிக்கையாக, சபரிவர்மனின் மரணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

சம்பவத்தின் முழு பின்னணி, மரணத்திற்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தும் நோக்கில் வழக்கு CBCID-க்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CBCID அதிகாரிகள் விரைவில் விசாரணையை தொடங்கி, சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

15 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: பிரான்ஸ் நாடாளுமன்றம் மசோதாவுக்கு ஒப்புதல்..!!

Read Next

முன்னாள் காதலனுக்கு எலி மருந்து கலந்த உணவு: இளம்பெண்ணுக்கு சிறைத்தண்டனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular