சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் 16 வயது சிறுமியை அவரது தந்தையே தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தாய் பிரிந்து சென்ற நிலையில், சிறுமியை மிரட்டி தந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமானதாகவும், பின்னர் தந்தையும் அவரது சகோதரியும் இணைந்து போலி ஆவணங்கள் மூலம் சிறுமியை திருமணமானவர் எனக் காட்டி மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அந்தக் குழந்தையை விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




