திருப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில், கொடிக்கம்பம் பகுதியைச் சேர்ந்த பனியன் நிறுவனத் தொழிலாளி அரசு (19) என்பவர் சிறுமியிடம் பழகி பாலியல் பலாத்காரம் செய்ததால் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அரசுவைக் கைது செய்தனர்.




