கேரளா பாலக்காடு மாவட்டம் காஞ்சிகோடு அருகே, முகமது இன்டியாஸ் என்பவரின் 5 வயது மகளை பராமரித்து வந்த அவரது இரண்டாவது மனைவி நூர் நாசர் (35), கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுக்கையை ஏற்றமாக்கியதாக கூறி, சிறுமியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுமி உட்கார முடியாமல் சிரமப்படுவதை கவனித்த அங்கன்வாடி ஆசிரியை விசாரித்ததில் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து நூர் நாசர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




