தூய மல்லி அரிசியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

தமிழர்களைப் பொறுத்தவரை அரிசி பிரதானமான உணவாக உள்ளது. அதிலும் பாரம்பரியமிக்க அரிசி வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. முற்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் அதிகம் பயன்படுத்திய அரிசி தூயமல்லி அரிசி என சொல்லப்படுகிறது .இந்த அரிசி பெயருக்கு ஏற்றவாறு மணமும் சுவையும் கொண்டுள்ளது. இந்தத் தூய மல்லி அரிசி வகையை மன்னர்கள் பாதுகாத்து வந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

சத்துக்கள் :

தூயமல்லி அரிசியில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, புரதச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.

ஆரோக்கிய நன்மைகள் :

தூயமல்லி அரிசியை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் வருவது தடுக்கப்படுகிறது. மேலும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தூயமல்லி அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது.

ஒரு சிலருக்கு பித்தம் உடலில் அதிகமாக இருக்கும். இதனால் அடிக்கடி வாந்தி, மயக்கம், குமட்டல் ஏற்படும். அவர்களுக்கு இந்த தூய மல்லி அரிசி நல்ல நிவாரணமாக இருக்கும் என என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வைட்டமின் சி சத்து இதில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்கிறது . இதனால் சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தூயமல்லி அரிசியில் புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிக அளவு இருப்பதால் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவருமே எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் எடையை பராமரிக்க நினைப்பவர்கள் தூய மல்லி அரிசி மற்றும் நம்முடைய பாரம்பரிய அரிசிகளை சுழற்சி முறையில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை கட்டுக்கோப்பாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். நம்முடைய தாத்தா, பாட்டி தற்போது வரை ஆரோக்கியமாக வாழ இது போன்ற பாரம்பரியமிக்க அரிசி உணவுகளை சமைத்து சாப்பிட்டதால்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால், நாம் இன்று சுவைக்காக பாலிஷ் செய்யப்பட்ட அரிசிகளையே அதிகம் உட்கொண்டு மிக குறைவான சத்துக்களையே எடுத்துக்கொள்கின்றோம். .அதனால், நம் உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் நிச்சயம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Read Previous

சிபிஐ முன்பு ஆஜராகும் விஜய்..!! டெல்லியில் ஏற்பாடுகள் தீவிரம்..!!

Read Next

5 வயது மக்களுக்கு அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த சித்தி..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular