கடந்த 60 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.10,400 வரை குறைந்துள்ளது. மே 24-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,840-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை ரூ.1,07,440-ஆகக் குறைந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம், பணவீக்கம் மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான சூழல்கள் தங்க விலையில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களின் கவனம் தங்கச் சந்தை மீது திரும்பியுள்ளது.




