தமிழகத்தில் மத்திய அரசு பல காப்பீடு நலத்திட்ட உதவிகளை செய்து வந்த நிலையில் தற்போது 70 வயது கொண்ட முதியவர்களுக்கு 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இச்செய்தி முதியோர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…
நாட்டில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஐந்து லட்சம் வரை மருத்துவ காப்பீடு திட்டம் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது, அவர்களுக்காக ஆயுஷ்மான் பாரத் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது, இதன்மூலம் நாடு முழுவதும் 6 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது, மேலும் இதன் மூலம் அஞ்சு லட்சம் வரை மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது இன்று டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு மற்றும் ஆலோசனைகள் எடுக்கப்பட்டு மிக விரைவில் இத்திட்டம் செயலுக்கு வருவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார், மேலும் இத்திட்டத்தின் மூலம் 70 வயது கொண்ட முதியவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு பயனடையும் வகையில் இருக்கும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர்..!!




