தவெக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை தலைவர் விஜய் பிப்.28ல் வெளியிடலாம் என்ற தகவல் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 50,000-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்ற நிலையில், நேர்காணல் இன்றி 80 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுவது நிர்வாகிகளில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 2வது வாரத்தில் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டார தகவல் தெரிவிக்கிறது.




