இன்று தங்கம் விலை திடீர் சரிவு..!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!
தமிழகத்தில் தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது. மேலும், இன்றைய நாளுக்கான தங்க விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, 1 சவரன் 53,640 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 6,705 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 91,500 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 91 ரூபாய் 50 காசுகளாகவும் விற்பனையாகி வருகிறது.




