சப்பாத்திக்கு அருமையான உருளைக்கிழங்கு முட்டைக்கறி..!!

சப்பாத்திக்கு அருமையான உருளைக்கிழங்கு முட்டைக்கறி..!!

செய்முறை :

முட்டையை வேக வைத்து தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

தேங்காயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

வெங்காயம், பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு, முந்திரி போட்டு சிவந்ததும், வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் அரைத்த தேங்காய் விழுது சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தேங்காய் கொதித்து பச்சை வாடை போனவுடன் முட்டை, உருளைக்கிழங்கு,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கடைசியாக கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

சுவையான உருளைக்கிழங்கு முட்டைக்கறி தயார்.

Read Previous

பெண்களே..!! பெண்மை குறைபாடு இருந்தால் இந்த அறிகுறி கண்டிப்பாக இருக்கும்..!!

Read Next

Accenture நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular