அன்பு கணவனுக்கு ஒரு சின்ன மன்னிப்பு கடிதம்🖤🖤💖
நிறுத்தி, நிதானமா யோசிச்சுதான் இந்த போஸ்ட்…
நீயும் என்னோட ப்ரண்ட் லிஸ்ட்ல இருக்கற.
நான் நேற்று இரவு ஒரு கனவுலக மீட்டிங் ல கலந்துகிட்டேன்…
நான் பண்ணின முதல் தப்பே, உன்னையும் அந்த மீட்டிங்க்கு கூட்டிட்டு போகாததுதான்,😢
ஒரு மஞ்சள் கயிறை நம்பி உன்னோடு வந்தவள் நான்❤️❤️
நீ என்ன உயிரா நெனச்சு நல்லாத்தான் என்கூட வாழ்ந்திட்டு இருக்கற..
நானும் அப்படித்தான்..
ஆனா இந்த நாசமா போன என்னோட ஜீன்கள் எல்லா
பசங்களையும் சைட் அடிக்க சொல்லும்..
நீயும் கூடத்தான் இருப்ப, அந்த பசங்கள பத்தி உன்கிட்ட வர்ணிச்சுக்கிட்டு வருவேன்..
என்ன நினைப்பியோ தெரியல..
சிரிச்சிகிட்டே கூட வருவ..
ஒரு கோபமோ, வருத்தமோ, சந்தேகமோ என் மேல உனக்கு வந்ததில்லை..
என்னோட வரம் நீ💖💖💖
நமக்கு கல்யாணம் ஆகி 5 வருஷம் ஆகிருச்சு…
இந்த அஞ்சு வருஷமும் உன் அரவணைப்புல தான் வண்டி ஓடுது..
இனியும் நிக்காம ஓடும்❤️❤️❤️❤️
சரி விஷயத்துக்கு வரேன்😥😥😥😥
நேத்தைக்கு கனவுல மீட்டிங் ல ஒரு பையன பார்த்தேன்..
நான் உன்னை முதன்முதல் பார்க்கும்போது வந்த அதே பிரளயம்..
(மன்னிச்சுக்கோடா).
அவன் பேரழகனன் எல்லாம் இல்ல..
கலரும் இல்ல..
உன் உயரம் தான் இருக்கும்..?
பேரழகன 😷 கட்டிக்கிட்டம்னு திமிர்ல வாழுற எனக்கு
அவன் ஒரு அழகே இல்ல..
உன்போல… உன்போல னு உதாரணமா ஆயிரம் சொல்லிரலாம்…
ஆனா அவன் நீ இல்ல..❤️❤️❤️
சிங்கம் மாதிரி புருஷன் இருந்தாலும் … னு
ஒரு பழமொழி இருக்கே.. அதை அப்பதான் உணர்ந்தேன்..
அதுக்குன்னு அவன் எலியும் இல்ல..
கண்களினால்…
கண்களை குதறும் சிங்கம்…😥😥😥
அவன் கண்கள்…🖤🖤🖤,
விரல்ல முள்ளு குத்தினா ஊசி விட்டு எடுக்கும்போது ஒரு வலி மண்டைக்கு ஏறுமே…
அந்த மாதிரி கண்கள்..
(மன்னிச்சுக்கோடா)
ரெண்டாவது நாள் தான் அந்த பிசாசு என் கண்ணுல பட்டுச்சு..
அந்த மைக்ரோ நொடியில் இருந்து அவனை பார்த்துக்கிட்டே இருக்கணும்னு ஒரு கண்டராவி எண்ணம் மனசுக்குள்ள ஓட தொடங்கிருச்சு..
(மன்னிச்சுக்கோடா)
அவனுடய கண்கள் தான் அதுக்கு காரணம்னு என் அறிவுக்கு நல்லா புரிஞ்சது…
நம்ம பொண்ணுங்க கண்களை விடவா அழகிருக்கப்போகுது…
ஆனா என்னையும் அறியாம அவனை பார்க்க தொடங்கிச்சு என் சில்லறதனமான மனசு..
அவன் என்ன கண்டுக்கவே இல்ல..
இன்னும் சொல்லபோனா ..
அவன் என்ன notice பண்ணவே இல்ல..
அவன் ஒரு மடசாம்பிராணி…
பார்த்த உடனே தெரியும் அவன் கல்யாணமானவன்னு..
(மன்னிச்சுக்கோடா)
அவனுக்கும் நம்மள போல ஒரு குடும்பம் இருக்கும்னு புரிஞ்சது..
ஆனாலும் என் தரித்திரம் புடிச்ச மனசு அவனை தேடியே இருந்துச்சு…
(மன்னிச்சுக்கோடா)
உன்னை முதன்முதல் பார்க்கும்போது என்னென்ன கண் சிமிட்டல் பண்ணினனோ அதெல்லாம் பண்ண தோணிச்சு..
ஆனா அவன் நீ இல்லை ங்கிறத என் அறிவு சொல்லிகிட்டே இருந்துச்சு..
இருக்குது.
(மன்னிச்சுக்கோடா)
அவன் பேர்,ஊர் வரை க்கும் தெரிஞ்சிகிட்டேன்..
அது மட்டும் போதும்னு இருந்திட்டேன்..
அவன் மொபைல் நம்பர் வாங்க வாய்ப்புருந்தும் என் மனசு ஒத்துகல..
இதுல அவன் தப்பு எதுவுமே இல்லை..
அவன் அவனாகத்தான் இருந்தான்..
நான்தான்…
நீ கூட இல்லாததினால
புத்தி இல்லாத நாயா மாறிட்டேன்.
(மன்னிச்சுக்கோடா).
உங்கூட எப்படியாவது செமையா வாழ்ந்திரனும் னு நினைக்கிற எனக்கு இந்த எண்ணம் வந்திருக்கவே கூடாது..
ஆனாலும் சொல்லி சுமைய எறக்கி வைக்க நீ மட்டும்தான் இருக்க..❤️❤️
நேர்ல சொன்னா எப்பவும்போல சிரிச்சிட்டு போய்ட்டா சந்தோசம்..
ஆனா பொட்டு பொட்டு னு திட்டீ என்ன கண்ணீர் விட வச்சா வாழ்நாள் பூராம் என்னால உன் கண்ணை பார்க்கவே முடியாது..
(மன்னிச்சுக்கோடா)..
இந்த போஸ்ட பார்த்திட்டு நேர்ல மட்டும் ஏதும் கேட்டிராத…
என்னால தாங்க முடியாது..
எப்டி கொல்றதாயிருந்தாலும்
கமண்ட் லயோ, இன்பாக்ஸ் லயோ கொன்னுரு..
திட்டிரு..
குற்ற உணர்ச்சியோட என்னால உன் கண்ணை பார்க்க முடியாது..
மன்னிச்சுக்கோ தங்கம்😓🙏😓😓😓😓




