பெரும் சோகம்..!! ஒரே நேரத்தில் தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை..!! போலீசார் விசாரணை..!!
ராஜஸ்தானை சேர்ந்த மாதுராம்(35) திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர். இவர் அதே பகுதியில் சொந்தமாக பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு நமன் (12) என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென இவர்கள் இவருவம் அவர்களது வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார் அவர்கள் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இவர்களின் இறப்பிற்கான காரணம் குறித்து தற்கொலையா, கொலையா மேலும் இறப்பிற்கான காரணம் என்ன என்ற நோக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பராபரையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




