மூன்று பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்..!!

1.) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

பொருள்:

மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும்.

உண்மையான பொருள்:

ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள்.

 

2.) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

பொருள்:

கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது.

உண்மையான பொருள்:

‘கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை’.

கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம்.

 

3.) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்.

பொருள்:

ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன்.

உண்மையான பொருள்:

ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.

நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.

Read Previous

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்..?

Read Next

20 வருடங்களுக்கு முன்பு.. தீபாவளி எப்படி இருந்தது?.. ஆனா இப்போ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular