.
.

ஒரே ஒரு சீனிவெடி பாக்கெட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எண்ணி எண்ணி வெடித்தது – நினைவில் இருக்கிறது..!!

.

தெரு தெருவாக சென்று வெடிக்காத வெடிகளை பொறுக்கி வந்து புதுரக வெடிகளை தானாக தயார் செய்தது – நினைவில் இருக்கிறது..!!

.

பணக்கார வீட்டுக் பிள்ளைகள் பட்டாசு வெடிப்பதை அருகில் நின்று வாய்பிளக்க வேடிக்கை பார்த்தது – நினைவில் இருக்கிறது..!!

.

பொறுக்கி வந்த

அணுகுண்டு

ஆட்டோ பாம்’களை
பந்தாவாக வெடித்தது – நினைவில் இருக்கிறது..!!

.
.

பேப்பரில்

வெடி மருந்துகளை மொத்தமாக சேர்த்து கொளுத்தும்போது ஏற்பட்ட தீக்காயம் – நினைவில் இருக்கிறது..!!

.
.

வெடிகளை கையில் பிடித்து எரிந்து

பெரியவர்களிடம்
திட்டு வாங்கியது – நினைவில் இருக்கியது..!!

.

அண்ணே

வெடி இருக்கு,

அக்கா

வெடி இருக்கு என்று
ரோட்டில் நடந்து வருபவர்களை ஓரமாக நடக்க வைத்து பயமுறுத்தியது – நினைவில் இருக்கிறது..!!

.
.

இன்னமும் 20 நாள் இருக்கிறது, இன்னமும் 10நாள் இருக்கிறது
என


தீபாவளியின் வருகைக்காக நாட்களை எண்ணியது – நினைவில் இருக்கிறது..!!

.
.
.
.
.
.
.
.

சகதிக்குள்

வெடிகளை அமுக்கி வைத்து வெடித்தது – நினைவில் இருக்கிறது..!!

.

மொட்டை மாடியில் நின்றுகொண்டு ஆங்காங்க வெடிக்கும்

வானவேடிக்கைகளை பார்த்து கைதட்டி ரசித்தது – நினைவில் இருக்கிறது..!!

.
.
.

இருபது வருடங்களுக்கு முன்பு நாங்கள் கொண்டாடிய தீபாவளியை இப்போதைய

சிறுவர்களும்

இளைஞர்களும் கண்டிப்பாக கொண்டாட முடியாது..!!

.