ஆண் பெண் நட்பு..!! அன்பும் நட்பும் தொடரட்டும்..!! படித்ததில் பிடித்தது..!!

ஆண்-பெண் நட்பு
தயக்கத்தோடு
ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்.
பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்.
அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ?-என்று
யோசித்து,யோசித்து
பேசும் தருணங்கள்,
காதல்,கீதல் என
உளறுவானோ?-என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்பக்காலங்கள்,
புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்..!
புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்.
தோல்விகண்டு
துவளுகையில்
புதுத்தெம்பூட்டி,
அடுத்த முயற்சிக்கு
அடிதளமிடவைப்பாள்
அவனை அவன் தோழி..!
ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்
பெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் தோழன்..!
முடிவில்லா முடிவில்-நட்பு
வளர்ந்து நிற்கும்?
என்னை வேறு யாரும் புரிந்து இருக்கமாட்டார்கள்
என் தோழியை/நண்பனை
விட நன்றாக
என்னும் ரீதியில்…!
வளரட்டும் இதுபோல்
ஆரோக்கியமாக
ஆண்-பெண் நட்பு…..
நண்பர்கள்தினம் முடிந்தது.
நட்புக்கு முடிவேது..?
அவ்ளோ நல்லவங்க எல்லாம் இங்க யாரும் இல்ல இது வந்து படிக்கிறதுக்கு நல்லா இருக்கும் அவ்வளவுதான்…😎
அன்பும் நட்பும் தொடரட்டும்……

Read Previous

பெண்கள் வயதுக்கு வரும் அறிகுறிகள் யாவை..?? கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

மத்திய அரசு வேலை..!! ரூ.60,000/- வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular