துத்தி செடியை உங்க வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க ஆசையா இதோ இப்படி செய்து பாருங்கள் துத்தி செடி அழகாக வளரும்…
துத்திச் செடியில் பத்து வகைகளுக்கு மேல் உள்ளன வட்ட வடிவமான கூர்மை கொண்ட இலைகளை உடைய துத்தி செடிதான் நம் பயன்பாட்டுக்கு உகந்தது, மஞ்சள் நிற பூவுடன் வட்ட வடிவ சக்கரம் போலான காயுடனும் காணப்படும் இச்செடியை சின்ன தொட்டியில் வளர்க்கலாம், இது கீரை வகையை சார்ந்தது மூலிகை இனம், இதன் இலை காம்பு பட்டை, பூ காய் வேர் என எல்லாமே மருந்து தான் லேசான இனிப்பு சுவையுடன் இருக்கும், ஆனால் நாம் வீட்டில் வளர்த்து அத்தனை பாகங்களையும் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை இதன் கொழுந்து இலைகளை பறித்து மென்று முழுங்கினாலே போதும், இச்செடியை வளர்க்க சிறிதளவு பராமரிப்பு போதுமானது, எரு உரம் கலந்த மண் தொட்டியில் காய்ந்த இதன் விதைகளை தூவினாலே ஒரு சில நாட்களில் செடி முளைக்கும் அடிக்கடி தண்ணீர் ஊற்றி பராமரிக்கலாம் இதன் மூலம் சுத்தி செடி நன்றாக வளரும்..!!




