டார்ச்சர் செய்த கணவரை மகனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிய மனைவி..!!

டெல்லியில் தன்னை டார்ச்சர் செய்த கணவரை தனது மனைவியே மகனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள மைதானம் அருகே பைகளில் ஆண் சடலத்தின் உடல் உறுப்புகள் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்டன. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக இருவரை கண்டறிந்தனர். தொடர்ந்து, அப்பகுதியின் செல்போன் எண்களை ஆய்வு செய்தனர். அப்போது, உடல் உறுப்புகள் கிடைப்பதற்கு முன்பும், பின்பும் 2 செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் பூனம் என்ற பெண், தன்னை கொடுமைப்படுத்திய கணவரை மகனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

Read Previous

எடுத்த காரியம் வெற்றி பெற..!! நீங்கள் எதைச் செய்தாலும் வெற்றி மேல் வெற்றி வேண்டுமா?..

Read Next

இழந்தது எல்லாம் திரும்பத் தா இறைவா..!! சிந்திக்க வைக்கும் பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular