ஒரு ஸ்பூன் நெய் நம் உடலில் அதிசயங்களை நிகழ்த்தும்..!! கண்டிப்பாக தினமும் காலையில் இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க..!!

 

ஒரு ஸ்பூன் நெய் நம் உடலில் பல அதிசயங்களை நிகழ்த்தும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா. இருப்பினும் நெய் அளவாக சாப்பிடுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது. நெய் என்பது மருத்துவத்திற்கு பயன்படுத்துவது மட்டுமல்லாமல் சுவைக்காக பயன்படுத்துவதால் இங்கு அதிகம். இந்நிலையில் காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய்யை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடித்து வர கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தற்போது பார்க்கலாம். இவ்வாறு குடிப்பதன் மூலம் நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபடலாம் மேலும் நெயில் இருக்கும் வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேவையில்லாத நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் கொழுப்பை கரைக்க இவ்வாறு நெய்யை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பதன் மூலம் நல்ல பலனை பெறலாம். மேலும் இவ்வாறு குடிப்பதன் மூலம் ரத்தத்தில் உள்ள ரத்த சுழற்சியை மேம்படுத்த இது உதவுகிறது. காலையில் வெதுவெதுப்பான நீரில் நெய் கலந்து குடிப்பதன் மூலம் சருமம் பொலிவாகவும் மென்மையாகவும் மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Previous

இரவில் பால் குடித்தால் உடலுக்கு ஆபத்தா..?? மருத்துவர்கள் கூறுவது என்ன..??

Read Next

இரவு நேரத்தில் தலை குளிப்பவரா நீங்கள்..?? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான் கண்டிப்பா படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular