பொதுவாகவே குழந்தைகளுக்கு காலநிலை காரணமாகவும் இடம் மாறுபாடு காரணமாகவும் தண்ணீர் காரணமாகவும் கூட சளி இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இந்நிலையில், சளி இருமல் பிரச்சனைக்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் மருத்துவம் செய்யலாம். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சளி மற்றும் இருமல் பிரச்சனை குணமாக, ஒரு கைப்பிடி அளவு துளசி சுத்தம் செய்து ஒரு சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து பிழிந்து கிடைக்கும் சாருடன் சம அளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இவ்வாறு ஒரு வேலைக்கு ஐந்து முதல் பத்து சொட்டு வரை ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து வேலைகள் கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதால் எப்பேர்ப்பட்ட சளியும் கரைந்து வெளியே வந்து விடும் மற்றும் வறட்டு இருமல் குத்து இருமல் கக்குவான் இருமல் போன்றவைகள் குணமாகும்.




