வீட்டிலேயே சுவையான மைசூர் பாகு செய்வது எப்படி..??
மைசூர்பாகு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் மைசூர் பாகு பிடிக்கும். ஆனால் மைசூர் பாகு செய்வது என்பது அனைவரும் விரும்ப மாட்டார்கள். அதனால் கடையில் வாங்கி சாப்பிடுவார்கள். கடையில் வாங்குவது அவ்வளவு ஆரோக்கியமாக இருக்குமா என்றால் அது கேள்வி குறித்தான்..?? இந்நிலையில் வீட்டிலேயே சுவையான மைசூர் பாகு செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு பங்கு கடலை மாவு மற்றும் இரண்டு பங்கு சர்க்கரை மற்றும் 3 பங்கு நெய் எடுத்துக் கொள்ளவும். கடலைமாவை பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து நெய் நிரப்பிய பாத்திரத்தை அதனுள் வைத்து டபுள் பாய்லிங் முறையில் சூடாக்கவும். அதாவது நெய்யை நேரடியாக சூடாக்க வேண்டாம் இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரையில் சிறிது தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். ஒரு கம்பி பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள கடலை மாவை சிறிது சிறிதாக அதில் சேர்க்க வேண்டும். சூடான நெய்யையும் சிறிது சிறிதாக சேர்க்கவும். சர்க்கரை பாகு சேர்த்த கடலை மாவு நெய்யும் ஒன்றாக திரண்டு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆரியபின் தேவையான அளவு துண்டுகள் போடவும். அவ்வளவுதான் சுவையான மைசூர்பாகு ரெடி.




