ஐபிலில் ஆரம்பித்து, சூடு பிடித்து வரும் நிலையில் நேற்று இரவு 7:30 மணியளவில் லக்னோவ் அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் லக்னோவில் போட்டி நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப், முதலில் பேட்டிங் செய்வதாக முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் ஆடிய லக்னோவ் அணியின் வீரர்கள் 171க்கு 7 விக்கெட்டுகளை விட்டு 20 ஓவரில் தனது பேட்டிங்கை முடித்தது. இதில், பூரான் என்னும் வீரர் 44 ரன்களும் படோனி 41 ரங்களும் எடுத்து அசத்தினர். அனால் மத்த வீரர்கள் அவருக்கு கய் கொடுக்கவில்லை. பௌலிங்கில் பஞ்சாப் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் அர்ஷிதீப் சிங் என்னும் வீரர் 3 விக்கெட்டுகளை எடுத்து லக்னோவ் அணியை பந்தாடினார்.
அடுத்து பேட்டிங் ஆட இறங்கிய பஞ்சாப் அணி இதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், பிரப்சிம்ரன் 69 ரன்களும் ஷ்ரேயஸ் 52 ரங்களும் வதேரா 43 ரங்களும் எடுத்து அசத்தினர். மற்ற அனைவரும் தனது சம பங்களிப்பை கொடுத்ததால் இலக்கை 16.2 ஓவரிலேயே பூர்த்தி செய்து லக்னோவ் அணியை பஞ்சாப் அணி வென்றது.




