காவல் துறையில் வேலை பார்ப்பது பல பேருக்கு கனவாகவும் லட்சியமாகவும் இருக்கும். அதற்காக பல காலம் நன்கு உழைத்து தனது உடலை தயார் செய்து வைத்திருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு நற்செய்தி. தமிழக காவல்துறை காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு எப்போது என்று தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் அதை எப்போது இருந்து விண்ணப்பிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தாலுகா மற்றும் ஆயுதப்படையில் உள்ள 1299 காலி பணியிடங்களை நிரப்ப காவல்துறை திட்டமிட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு வரும் ஏழாம் தேதி முதல் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதியை பின்னர் அறிவிக்க உள்ளதாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உங்களது காவல்துறை லட்சியத்திற்கு விதை போடுங்கள்.




