தீராத பல் வலியை நொடியில் போக்கும் 10 இயற்கை மருத்துவ முறைகள் இதுதான்..!!

 

நம்மில் சிலருக்கும் திடீரென அடிக்கடி பல்வலி வரும். பெரியோர்கள் கூறுவார்கள் எந்த வலியையும் தாங்கிக் கொள்ளலாம் ஆனால் இந்த பல் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்று. அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் எவ்வளவு பெரிய வலி என்று.நம் பற்களின் இரண்டு பாதுகாக்கும் கவசங்கள் இனாமல், டென்டின் உள்ளது.இரண்டையும் தாண்டி சொத்தை ஆழமாக பரவும் போது வலி ஏற்படும். இதனை சரி செய்யும் முறைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.

மிளகு தூளுடன் உப்பு சேர்த்து பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.

ஈறுகளில் வீக்கம் மற்றும் வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில் தடவி, இலேசாக தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும்.

பல் வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று தின்னவும்.

பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கிபல் தேய்க்க, பல் ஆட்டம், பல் சொத்தை, பல் கறை, பல்லில் இரத்தம் வடிதல்எல்லாமே தீரும்.

ஆலமர பாலை பற்கள் மீது தடவினால் பல் ஆட்டம் நிற்கும்.

ஆயில் புல்லிங் தினம் செய்ய பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும். வைரஸ், பாக்டீரியா தொற்றிலிருந்து விடுபடலாம்.

கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட பல் பலப்படும். நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பவும்.

ஓமத்தை நீர்விட்டு அரைத்து களி போல் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப்போடவும்.

ஒரு பல் பூண்டை நசுக்கி, வலி உள்ள இடத்தில் வைக்கலாம்.

இதுபோல் கிராம்பை நசுக்கியும் வைக்கலாம்.

வாகை மரப் பட்டையை எரித்து பொடித்து பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல் வலி குணமாகும்.

கருவேலம் பட்டை பொடியால் பல் துலக்கவும்.
மாசிக்காயைத் தூளாக்கி, நீரில் கொதிக்க வைத்து கொப்பளிக்க ஈறு பலமடையும்.

அசோக மரப் பட்டைப் பொடியுடன் உப்பு சேர்த்து விளக்கவும்.

கடுகை பொடி  செய்து வலிக்கும் இடத்தில் பற்று போடவும்.

வெங்காய சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவவும்.

Read Previous

உங்களுக்கு நினைவாற்றல் கம்மியாக இருக்கிறதா..!! இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் பிரச்சனை முடிந்து விடும்..!!

Read Next

ஆவினில் Veterinary Consultant பணிக்கான வேலைவாய்ப்பு..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular