கைகூப்பி வணக்கம் செலுத்துகிறோம் ஏன் தெரியுமா..?? அதற்கான காரணம் என்ன தெரியுமா..??
நம்முடைய முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து வயதில் பெரிதாக இருப்பவர்களையும் புதிதாக அறிமுகம் ஆனவர்களையும் பார்த்தால் கைகூப்பி வணக்கம் செலுத்தி வரவேற்பார்கள். அது மட்டும் இன்றி ஏதாவது வீட்டில் விசேஷம் என்றால் வரும் விருந்தாளிகளையும் கைகூப்பி வணக்கம் செலுத்தி வரவேற்பார்கள். இது நம்முடைய பாரம்பரிய வழக்கமாக இருந்தாலும், இது மற்றவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கிறது. இதற்குள் ஒரு அதிசியம் மறைந்து இருக்கிறது அது என்னவென்றால் நாம் இரு கையை கூப்பி வணக்கம் செலுத்தும் போது நம்முடைய விரல்கள் பத்தும் ஒன்றாகின்றன இது நம் உடம்பில் இருக்கும் காது, கண், மூளைகளின் உணர்ச்சி புள்ளிகளை தூண்டுகின்றன. அதனால் நாம் ஒருவரை காணும் போது கை கூப்பி வரவேற்பது அவர்களை அதிக அளவில் நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது. உண்மையான காரணம் இதுதான்.




