நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில் இப்போது இருக்கும் நவீன காலத்தில் நமது உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்ற பொருட்களை நாம் கம்மியாக தான் சாப்பிட்டு வருகிறோம். அப்படி இன்று ப்ரோக்கோலி நாம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் காண்போம்.
ப்ரோக்கோலி நாம் அதிகமாக சாப்பிட்டு வந்தால் மூளை வளர்ச்சி மேம்பட்டு நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் இது நரம்பு ஆரோக்கியத்துக்கு முக்கிய பங்கை வகிக்கிறது. இது மட்டுமில்லாமல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் மாரடைப்பு பிரச்சனைகளும் குறையும்.
நமது உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் ப்ரோக்கோலி சாப்பிடுவது மிக சிறந்த தீர்வாக அமையும். மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் ப்ரோக்கோலி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தில் உதவி செய்து மூட்டுவலி பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது. ஆகையால் இத்தனை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ப்ரோக்கோலியை சாப்பிட்டு நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் சேர்த்து வைப்போம்.




