நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக்க ரவிச்சந்திரனின் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகி வசூலில் பல சாதனைகளை செய்து வரும் படம்தான் குட் பேட் அக்லி. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஃபேன் பாய் சம்பவமாக கருதப்படுகிற இந்த படத்தில் பல பழைய படங்களின் ரெஃபரன்ஸ்கள் இருந்தன. அஜித்தின் பழைய படங்களிலிருந்தும் மற்ற, இதுவரை மக்களால் ரசிக்கப்பட்ட பாடல்களிலிருந்தும் ரெஃபரன்ஸ்கள் இருந்தன.
இதுதான் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஆனால் இதேபோன்று கடந்த சில நாட்களாக பல படங்களில் இயக்குனர்கள் செய்து வருகின்றனர். அப்படி செய்வதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் இளையராஜா பாட்டை அந்த படத்தில் வைத்திருந்தால் இளையராஜா அவர்கள் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறார்.
அப்படி குட் பேட் அக்லி படத்தில் இவரது பாடல்கள் பொருத்தப்பட்டிருந்ததாள் இழப்பீடாக 5 கோடி ரூபாய் கேட்டுள்ளார். ரஜினி படத்திற்கு இழப்பீடு கேட்ட இவர் அஜித் படத்திற்கு கேட்காமல் இருப்பாரா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் பலர், இவர் நம் ரிங்க்டோனுக்கு கூட காசு கேட்பார் போல என்று விமர்சித்தும் வருகின்றனர்.




