IPL 2025..!! விறுவிறுப்பான போட்டியில் வென்றது யார்..!! இந்த வருடத்தின் முதல் சூப்பர் ஓவர்..!!

ஐபிஎல் ஆரம்பித்து அனைத்து அணிகளும் பாதி போட்டிகளை விளையாடி முடிக்கின்ற தருவாயில் இருக்கின்றது. இந்த நேரத்தில் பல அணிகள் முதல் நான்கு இடத்திற்கு போட்டி போட்டு வருகின்றது. ஒரு சில அணிகள் பரிதாபமாக கடைசி இடங்களில் இருக்கின்றது. ஆனால் அடுத்து வரப்போகும் போட்டிகளில் என்ன  வேணுமானாலும் நடக்கலாம். யார் வேண்டுமானாலும் முதல் நான்கு இடத்தை பிடிக்கலாம் என்ற சூழ்நிலை அமைந்துள்ளது. அந்த வகையில் நேற்று டெல்லி அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் டெல்லியில் போட்டி நடந்து முடிந்தது.

முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிடல் அணி 188க்கு ஐந்து விக்கெட்டுகளை விட்டு 20 ஓவர் தனது பேட்டிங்கை முடித்தது. முதலில் பொறுமையாக தொடங்கினாலும் இறுதியில் இமாலய இலக்கை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்தது. இதில் அபிஷேக் போரல் எனும் வீரர் 49 ரன்கள் எடுத்து அசத்தினார். பவுலிங் இல் ராஜஸ்தான் அணிக்கு ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டு விக்கெட் களை எடுத்துக் கொடுத்தார்.

அடுத்ததாக களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 188 எடுத்து நாலு விக்கெட்டுகளை விட்டு 20 ஓவர் இல் தனது பேட்டிங்கை முடித்தது. இறுதியில் மிச்சல் ஸ்டார்க் போட்ட பந்துவீச்சால் போட்டி சமமாகி முடிந்தது. 2025வது ஐபிஎல் இல் இதுவே முதல்முறை. சூப்பர் ஓவரில் ராஜஸ்தானி 12 ரன்கள் இலக்காக வைத்தது. டெல்லி கேப்பிட்டல் அணி நான்கே பந்துகளில் இலக்கை எட்டி வென்றது. அத்துடன் டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கும் சென்றது.

Read Previous

கோடைகாலத்தில் உங்கள் குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்வது என்று தெரியுமா..!! பெற்றோர்களே, நிச்சயம் படிங்க..!!

Read Next

உங்களிடம் பணம் அதிகமாக தங்க வேண்டுமா..!! இந்த பதிவை கட்டாயம் பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular