உங்களுக்கு பசி அதிகமாக ஏற்படுகிறதா..!! இந்தப் பிரச்சினைகளால் கூட அது இருக்கலாம்..!!

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க பல சத்துக்கள் தேவையாக இருக்கின்றன. இவை அனைத்தையும் நாம் சாப்பிடும் போது சாப்பிடுகின்ற உணவுகள் மூலம் உடல் எடுத்துக் கொள்ளும். அதனால் தான் சாப்பிடாமல் இருக்கும் போது பசி ஏற்படுகிறது. ஆனால் சாப்பிட்ட பின்னரும் பசி ஏற்பட்டால் நமது உடலில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.

மன அழுத்தம் இருப்போருக்கு பசி அதிகமாக ஏற்படும். பதற்றமாக இருக்கும் போது நமது உடலில் ஹார்மோன் அதிகளவு சுரந்து பசியை தூண்டும். நமது உடலில் எரிக்கப்படும் கலோரிகளுக்கும் குறைவான கலோரிகளை நாம் சாப்பிட்டால் பசி அதிகமாக ஏற்படலாம். மேலும் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் இருக்கும் சாப்பாட்டை சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் போது டிவி செல்போன் பார்த்தால் அது பசி உணர்வை தூண்டிக்கொண்டே தான் இருக்கும். அதிகப்படியாக உடற்பயிற்சி செய்தாலும் பசி அதிகமாக ஏற்படலாம். அதேபோல அவசர அவசரமாக சாப்பிட்டாலும் பசி ஏற்படும்.

Read Previous

உங்களுக்கு முடி அதிகமாக உதிர்கிறதா..!! அதற்கு இது கூட காரணமாக இருக்கலாம்..!!

Read Next

கோவைக்காயை வைத்து பக்கோடா செய்து இருக்கிறீர்களா..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular