நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஆனால் ஒரு சில நேரங்களில் ஆரோக்கியமான உணவு என்றாலும் அதை சாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும். அப்படி இரவு நேரங்களில் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்னவென்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
இரவு நேரங்களில் செரிமானம் அவ்வளவு சீக்கிரம் நடக்காது. ஆகையால் எளிதில் செரிமானமாகும் உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும். அப்படி செய்யாமல் இருந்தால் செரிமான கோளாறு நெஞ்செரிச்சல் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வரும். இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க இரவு நேரங்களில் எளிதாக செரிமானமாகும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
அந்த வகையில் இரவில் நாம் தக்காளி ஐஸ்கிரீம் கிரீன் டீ சீஸ் எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆரஞ்சு திராட்சை பழங்கள் உலர் பழங்கள் பீட்சா சாக்லேட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதனை உட்கொண்டால் நமது தூக்கமும் சரியாக இருக்காது. ஆகையால் இந்த உணவுகளை எல்லாம் இரவில் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.




